BiggBoss நிகழ்ச்சியின் புதிய சீசனை தொகுத்து வழங்கப்போகும் பிரபல நடிகர்- வெளியான தகவல்

BiggBoss நிகழ்ச்சி பற்றி இப்போது சின்ன குழந்தையிடம் கேட்டால் கூட தெளிவாக சொல்லும். அந்த அளவிற்கு மக்களை நிகழ்ச்சி கட்டிப்போட்டுள்ளது.

download (19)

பாலிவுட்டில் 11 சீசன் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் முதல் சீசன் தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கன்னடத்தில் 5வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த புதிய சீசனை பிரபல நடிகரான சுதீப் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

சுதீப் இதற்கு முன் கன்னட BiggBoss நிகழ்ச்சியின் முதல் சீசனையும், 4வது சீசனை தொகுத்து வழங்கியுள்ளார்.