புகையிரதத்தில் மோதுண்டு பிரபல ஆசிரியையின் கணவர் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயதுடைய வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

2889-1-a5c52fc2f08524a73c39f3e877ce53d5

யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்.

விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

உயிரிழந்தவர் பிரபல தமிழ்மொழி பாட ஆசிரியை மீராவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.