இலங்கையில் மூன்று சிறுவர்களை ஒரே நேரத்தில் துஸ்பிரயோகப் படுத்திய நபர்

சிறுவர்கள் மூவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்த நபரை கிராம மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் மாதம்பை பகுதியில் பதிவாகியுள்ளது.

காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், நாத்தாண்டியா தம்போவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.

அத்துடன், சந்தேக நபர் திருமணமானவர் என்பதுடன் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கிராமத்துக்கு கிராமம் உந்துருளியில் சென்று இவ்வாறான சிறுவர்களை தேடி, பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை சந்தேக நபர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கு பணம் கொடுத்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு நேற்றைய தினமும் சிறுவர்கள் 3 பேர், மாதம்மை சுதுவெலி பிரதேசத்தில் உள்ள காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதனை கண்ட கிராம மக்கள், சந்தேக நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பில் மாதம்பை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபர் அடிக்கடி குறித்த காட்டுப் பகுதிக்கு உந்துருளியில் வந்துசெல்வதை கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கண்டுள்ளனர்.

அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் சிறுவர்களை அழைத்துக்கொண்டு சென்றபோது, அதன கண்டவர்கள், அவரது பிள்ளைகள் என நினைத்துள்ளனர்.

காட்டுக்குள் சென்ற நபர் நீண்ட நேரமாகியும் வராமையால், இரு இளைஞர்களின் ஒருவர், உள்ளே சென்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

அங்கு சென்றபோது, சந்தேக நபர் ஒரு சிறுவனின் கழுத்தை அழுத்தி பிடித்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். மற்றைய சிறுவர்கள் அழுதுகொண்டிருந்துள்ளனர்.

அதனையடுத்து, சந்தேக நபரை தாக்கிய இரண்டு இளைஞர்கள், சிறுவர்களை விடுவித்துள்ளனர்.

தன்னை அங்கிருந்து தப்பிசெல்ல விட்டால் பணம் தருவதாக சந்தேக நபர் கூறியுள்ளார். அதனை ஏற்காத இளைஞர்கள் கிராம மக்களை அழைத்துள்ளனர்.

அங்கு வந்த மக்கள், சந்தேக நபரை பிடித்து அடித்து, உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

‘நாங்கள் அங்கு சென்றிருக்காவிட்டால், அந்த சிறுவர்களுக்கு பாரிய விபரீதம் இடம்பெற்றிருக்கும்’ என, சிறுவர்களை காப்பாற்றிய இளைஞன் தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் விளையாடுவதற்காக சென்ற சிறுவர்களை ஏமாற்றி காட்டுக்குள் அழைத்து சென்று சந்தேக நபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக மற்றைய இளைஞன் கூறினார்.