பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்த நடிகை மதுமிதா…

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகை மதுமிதா தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட சண்டையில் அவரின் கையை பிடித்து கடித்துக்குதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகர் சந்தானத்தின் காதலியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலாமனவர் நடிகர் மதுமிதா. அதன் பின் அவர் பல திரைப்படங்கள் உட்பட சின்னத்திரையில் பல தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார்.
மதுமிதா தற்போது வளசரவாக்கத்தில் உள்ள அன்பு நகரில் வசித்து வருகிறார். இவருக்கும், இவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் உஷா என்கிற பெண்ணிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, மதுமிதா மீது உஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து விசாரணைக்கு வருமாறு மதுமிதாவை போலிசார் அழைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மதுமிதா, நேராக உஷாவின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், உஷாவின் கையை பிடித்து மதுமிதா கடித்துள்ளார்.
தற்போது ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.