அடுத்த ஏவுகணை சுட்டு வீழ்த்தப்படும் அமெரிக்கா அறிவிப்பு

வடகொரியா அடுத்த ஏவுகணையை ஏவி பரிசோதனை நடத்தினால். அதனை நடு வானில் வைத்து சுட்டு வீழ்த்த தாம் தயாராக உள்ளதாக அமெரிக்கா முதன் முறையாக அறிவித்துள்ளது. வடகொரியாவுக்கு அருகே கடலில் நிலை கொண்டுள்ள அமெரிக்க கடல் படைக் கப்பலுக்கு, இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
1059605
இருப்பினும் அமெரிக்க அதிபரின் நேரடி உத்தரவு கிடைத்தால் மாத்திரமே, கடல்படை கப்பல் தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஏவ முடியும். இந்த அறிவிப்பானது சற்று முன்னர் வெளியாகி மேலும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.

ஆனால் இதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் இருக்கிறார். அவர் தொடர்ந்தும் பல ஏவுகணைகளை பரிசோதிக்க முடிவு செய்துள்ளார். அடுத்த ஏவுகணையை வட கொரியா ஏவினால் என்ன நடக்கும் ? 3ம் உலகப் போர் ஆரம்பிக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.