இன்றைய ராசிபலன் (01/09/2017)

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகிச் சென்ற உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப் பவர்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

  • துலாம்

    துலாம்:  உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமை கூடும். நட்பால் ஆதாயம் உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்: பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • கும்பம்

    கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி
    வரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சவாலில் வெற்றி கிட்டும் நாள்.

  • மீனம்

    மீனம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு லாபம் காண்பீர்கள். உத்யோகத்தில் மதிப்பு கூடும். சிறப்பான நாள்.