விடுதலை புலிகள் மீதான தடை நீக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் மாத்திரம்தான் மேற்கொண்டுள்ளது. இலங்கை இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிலையம் ஒன்றில் வைத்து இன்றைய தினம்(31) பத்திரிகையாளர்களிடம் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கையில் இன்னும் ஆட்கடத்தல், துஸ்பிரயோகம், கொலை என்பன தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவருக்கு 10 பேர் என்ற அடிப்படையில் இராணுவ வீரர்கள் உள்ளனர். எப்படி சுதந்திரமாக வாழ முடியும்? வாழ்விடங்கள் எல்லாம் இராணுவ முகாம்களாக மாறியுள்ளது.
எதற்காக போராட்டம் தொடங்கியதோ அந்த நோக்கம் இன்று வரையும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது மட்டும் இல்லை. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஈழத்தமிழர்களுக்கு உதவவில்லை. உதவிய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவந்தார்.
சட்ட சபையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை முதன் முறையாக கூறினார்.
இதேவேளை, சட்ட சபையில் மதிப்பு மிக்க ஓர் வழிமையான தீர்மானத்தை கொண்டுவந்தார். அது மட்டும் இல்லை ராஜபக்ச ஓர் போர் குற்றவாளி எனவும் ஜெயலலிதா பகிரங்கமாக தெரிவித்தார்.
மேலும், ஈழத்தமிழர்களுக்கு தனி ஈழத்தை தவிர வேறு தீர்வு இல்லை என்ற தனி தீர்மானத்தையும் கொண்டுவந்தார். இது பாராட்டத்தக்க விடயமாகும்.
எனினும், ஈழத்தமிழர்களுக்கு என்றும் உதவியது கிடையாது. உதவிய ஒருவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.