செப்டம்பர் 2-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்கிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கைகூடும்?
ஜோதிட நிபுணர் ‘ஆஸ்ட்ரோ’ கிருஷ்ணனிடம் கேட்டோம்.
பொதுவாக, சனி, ராகு கேது பெயர்ச்சியில் எல்லோர் மனதிலும் ஒரு வித கலக்கம் இருக்கும். என்ன கஷ்டம் வரப் போகிறதோ என்ற கவலை இருக்கும். ஆனால், குருப்பெயர்ச்சியின் போது மட்டும் எல்லோர் மனதிலும் ஓர் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும்.
ஜாதக ரீதியாக, திருமணமாகாத ஒவ்வொருவரும், குருபெயர்ச்சிக்குப் பிறகு தனக்கு திருமணம் கைகூடுமா என்று ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.
குருவுக்கும் திருணத்துக்கும் என்ன சம்பந்தம்? குரு என்பவர் சந்நியாசியைப் போன்றவர். பாசம் பற்றைத் துறந்தவர் என்பார்கள். அவர் எப்படி திருமண யோகத்தைத் தருவார்..?
குரு பகவான் ஒரு பாக்யாதிபதி. அவர் மங்களகரமான மஞ்சள் நிறத்துக்கு உடையவர். தங்கம் என்கிற உலோகத்துக்கு உரியவர். மஞ்சளும் தங்கமும் கலந்த கலவையாக திருமாங்கல்யம் இருப்பதால், ஒரு மங்களகரமான சுபக்கிரகமாக குருபகவான் இருக்கிறார். ஒரு பெண்ணுக்கு மாங்கல்ய பாக்யத்தைத் தருபவராக ஜொலிக்கிறார்.
ஜாதகத்தில் களத்திரக்காரகன் என்பவர் சுக்கிரன். ஒருவருடைய துணையைச் சுட்டிக்காட்டுபவர். ஆனால், அவருடைய நகர்வை, நாம் அவ்வளவு முக்கியமாகப் பார்ப்பதில்லை. ஆனால், குரு பகவான் ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசிக்கு மாறும்போது அவர் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வைத்து, ‘வியாழ நோக்கம்’ வந்துவிட்டதா? (‘குரு பார்வை’ வந்து விட்டதா) என்று கேட்பார்கள்.
பொதுவாக ஜோதிடத்தில், ‘குரு, இருக்கும் இடத்தைக் கெடுப்பார், பார்க்கும் இடத்தை பலமாக்குவார்’ என்பார்கள். அதனால், குரு பார்வை இருந்தால் திருமண யோகம் வரும். இதற்கு பராசர முனிவர் சில விதிகளை தந்துள்ளார். அவற்றை முதலில் பார்ப்போம்.
கோட்சார குருவின் பார்வை!
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், ஜாதகருடைய ஏழாம் பாவம் அல்லது அந்த ஏழாம் அதிபதி நிற்கும் பாவத்துக்கு கோட்சார குருவின் பார்வை ஏற்பட்டால், திருமணம் கூடிவரும்.
பெண் ஜாதகத்தில் குரு, ஜாதகருடைய ஏழாம் பாவம் அல்லது அதன் அதிபதி நிற்கும் இடத்துக்கு கேந்திர ஸ்தானங்களான 4, 7, 10 இடங்களில் வரும் காலமும் அல்லது பார்வைபடும் காலமும் திருமணம் கை கூடும்.
மேலும், ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் என்பது இரண்டாம் இடமாகும். களத்திர ஸ்தானம் என்பது ஏழாம் இடமாகும். மனதின் ஆசைகள் நிறைவேறும் இடம் பதினோறாம் இடமாகும். எனவே, லக்னத்தில் இருந்து 2, 7, 11 ஆகிய இந்த இடங்களிலும் குருவின் பார்வை பட்டால், திருமணம் கைகூடும்.
ஒருவருக்கு ராகு தசை, அல்லது ஏழாம் இடத்து அதிபதியின் தசை அல்லது சுக்கிர தசையில் ராகு புத்தி நடைபெறும் போது திருமணம் கைகூடும்.
மேற்சொன்ன குரு பகவான் பார்வையோடு, மேலே குறிப்பிட்ட தசையோ, புத்தியோ நடைபெற்றால் திருமணம் கண்டிப்பாக கை கூடும். காலச்சக்கரம் எனும் ஜாதகத்தின் ஒன்பதாம் இடம், குரு பகவான் இடமாகும். அது பாக்யஸ்தானமாகும். ஆகவேதான், குரு பார்வை எல்லா பாக்கியங்களையும் கொண்டு வருகிறது. ஜாதகத்தில் களத்திரக்காரகன் எனப்படும் சுக்கிரனுக்கு குருவின் பார்வை ஏற்படும் காலமெல்லாம் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் காலமாகும்.
வாக்கியப்படி வருகிற செப்டம்பர் மாதம் 2- ம் தேதி (திருக்கணிதப்படி வருகிற செப்டம்பர் மாதம் 12- ம் தேதி காலை 6.51) காலை 9.25 மணிக்கு நடக்கும் இந்தப் பெயர்ச்சியில், குரு பகவான் கன்னி ராசியில் இருந்து, துலாம் ராசிக்கு பெயர்கிறார். அங்கிருந்து கும்பம், மேஷம், மிதுனம் ஆகிய ராசிகளை பார்வையிடுவதால், அந்த ராசிகள் பலம் பெறுகின்றன. கும்பம், மேஷம், மிதுனம் ஆகிய இந்த ராசிகளை குடும்பஸ்தானமாகவோ ( 2-ம் இடம்), களத்திரஸ்தானமாகவோ (7-ம் இடம்) உடையவர்களுக்கும் அந்த அதிபதிகள் நிற்கும் இடமாக இருந்தாலும், திருமணம் கைகூடும். இந்த ராசிகளில் சுக்கிரன் இருப்பவர்களுக்கும் திருமண யோகம் ஏற்படும்.
யாரை வழிபட வேண்டும்?