விஜய்யுடன் மோத தயாரான கார்த்தி..!!

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருக்கின்றனர். சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டுக்குப் பிறகு, படம் ரிலீசுக்கு படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

vijay-karthi

தீபாவளி ரேஸில் விஜய்யுடன் சுசீந்திரன் இயக்கி இருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வெளியாக இருக்கிறது. மேலும் அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சொல்லிவிடவா’ படமும், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹர ஹர மகாதேவகி’ படமும் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கார்த்தி நடித்திருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இதில் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.