புனித ஹஜ் பெருநாள் நாளைக் கொண்டாடப்படவுள்ளதால், இன்று (வெள்ளிக்கிழமை) 01ஆம் திகதியும், நாளை 02ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளை அரச பொது விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹஜ்ஜுப் பெருநாளை அனுஷ்டிக்கும் தினத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற குழப்பத்தில் விடுமுறை தினம் பற்றியும் பேசப்பட்டு வந்ததால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.