தமிழகம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த அனிதா, மருத்துவ கல்வியை தொடர முடியாமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் முழு தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், சென்னை, திருச்சி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் வீதிமறியல் போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவி அனிதாவுக்கு ஆதரவாக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில்,
மாணவி அனிதாவின் தற்கொலை துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ள நடிகர் ரஜினஜகாந்த், அனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல், மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது என்றும், இது தொடரக்கூடாது என்றும், அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவி அனிதாவுக்கு ஆதரவாக ஸ்டாலின், வைகோ, வேல்முருகன், சீமாம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய மற்றும மாநில அரசுக்கு எதிராக கண்டனம் வெளியிட்டள்ளனர்.