விடுதலைப்புலிகளின் கோட்பாடு இன்னமும் உயிருடன் இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கானது விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை சிறிலங்கா இராணுவம் முற்றாக மறுப்பதாக தெரிவிக்கும் அவர் ஜெனரல் ஜெகத்சூரியவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கானது, விடுதலைப்புலிகளின் கோட்பாடு இன்னமும் உயிருடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது எனத் தெரிவித்தார்.
இதேவேளை நேற்றயதினம் அமைச்சர் ராஜித சேனாரட்ண மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் நேற்றையதினம் காட்டமான பல கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.