தமக்காக இல்லாவிட்டாலும் தம்மை போல ஏழ்மையில் வாடும் மாணவர்களுக்காக நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என அண்மையில் அனிதா கூறியிருந்தார்.
நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கனவை பறிகொடுத்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தையே பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் உறைய வைத்துள்ளது. நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராட துணிந்த அனிதாவின் தற்கொலை முடிவை எவருமே ஏற்க முடியாமல் பரிதவிக்கின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் அனிதா கூறியிருந்தாவது:
மூட்டை தூக்கி…
நான் டென்த் டுவெல்த்ல நிறைய மார்க் எடுத்தேன்… எங்க அப்பா திருச்சியில மூட்டை தூக்கிதான் எங்களை படிக்க வெச்சாரு…
நீட் எக்ஸாமால் பாதிப்பு
நாங்க ரொம்ப கஷ்டபடுற பேமிலிதான்…எனக்கு எம்பிபிஎஸ் படிக்கனும்கிறது கனவு. ஆனா நீட் எக்ஸாம் வந்ததால எங்களால படிக்க முடிக்கயலை.. நீட் எக்ஸாமில் செலக் ஆக முடியலை
மற்றவர்களுக்காக…
எனக்காக இல்லைன்னாலும் என்னை மாதிரி கஷ்டப்பட்டு படிக்கிற பேமிலி இருக்காங்க.. அவங்களுக்காச்சும் இனிமேலாச்சும் நீட் எக்ஸாமை தடை செய்யனும்னு தமிழக அரசை கேட்டுக்கிறேன்.
அக்ரி
இப்ப எம்பிபிஎஸ் என்னால படிக்க முடியாது… அக்ரி இந்த மாதிரி வேற ஏதாவது சேர்ந்து படிக்கலாம்னு இருக்கேன். அக்ரி படிச்சு வெவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கனும். இவ்வாறு அனிதா கூறியிருந்தார்.