தமிழகத்தின் ஆளுநர் பதவி நிர்மலா சீதாராமனுக்கு??

மத்திய இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கான நிரந்தர ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திற்கு ஆளுநராக இருந்த ரோசய்யா பதவிக்காலம் முடிந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த வித்யாசகர் தமிழகத்திற்கும் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டாக நிரந்தர ஆளுநராக யாரும் நியமிக்கப்படவில்லை. இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு மாநிலத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவர் அதிக காலம் பணியாற்றியது இப்போதுதான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கான ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

seetha

தமிழகத்தில் ஆளுநரின் பங்கு வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிகரித்துள்ளது. அதிமுகவில் நிலைத்தன்மை இல்லாத நிலையில் அநேக நேரம் தலைமைச்செயலாளர் மாநில காவல்துறை இயக்குநர் சென்னை காவல் ஆணையர் பலரும் அடிக்கடி ஆளுநரைச் சந்தித்து சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் தான் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் அரசமைப்பின் தலைவர்.

தமிழகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவிவரும் சூழ்நிலையில் தமிழகம் ஓரளவு நல்ல புரிதல் உள்ள அரசியல் தெரிந்த ஒருவரை ஆளுநராக நியமிப்பது உதவியாக இருக்கும் என்று டெல்லி நினைப்பதாகவும் எனவே நிர்மலா சீதாராமன் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.