மூன்றாம் உலகின் சிறந்த இளம் விஞ்ஞானியாக இலங்கையர் தெரிவு!

மூன்றாம் உலகின் சிறந்த இளம் விஞ்ஞானியாக இலங்கையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் ரங்கிக உமேஷ் ஹல்வத்துர (Rangika Umesh Halvathura) என்பவருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

sdbs

சூழலுக்கு நெருக்கமான பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து ரங்கிக உமேஷ், இந்த வருடத்திற்கான “மிகச்சிறந்த இலங்கையர்” என்ற விருதை பெற்றுள்ளார்.

இத்தாலியை தலைமையகமாக கொண்ட உலக அறிவியல் அகாடமியினால் (TWAS – The World Academy of Science) இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் அறக்கட்டளையினாலேயே அவரது பெயர் The World Academy of Science இன் விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டது.

dbd

கடந்த வருடம் உயிரியல், வேதியியல், பொறியியல், இயற்பியல் மற்றும் பிற துறைகளில் இளம் விஞ்ஞானிகள் வழங்கியுள்ள பங்களிப்பு, அவற்றின் ஆராய்ச்சிகள் பிற துறைகளில் மேற்கொண்ட சாதனைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே இந்த விருது வழங்கப்படுகின்றது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பேராசிரியர் ரங்கிக உமேஷ் ஹல்வத்துர,

தனது கண்டுபிடிப்பினால் கிடைக்கும் சர்வதேச விருதை விடவும், தனது கல்விக்கான செலவுகளை வழங்கிய இலங்கையர்களுக்காக சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தமை மகிழச்சி ஆகும்.

உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிறிய இடம் ஒன்றில் இருந்த வந்த நபர் நான். நான் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்றவன் அல்ல.

dbsc

களுத்துறையில் உள்ள சிறிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு சென்று இவ்வாறான ஒரு இடத்திற்கு வந்தமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த விருதை விடவும், நான் இந்த இடத்திற்கு வருவதற்கு உதவிய ஏழை மக்களுக்கு ஏதாவது ஒன்றை செய்வதற்கு கிடைத்த சந்தர்ப்பம் குறித்தே நான் மகிழ்ச்சியடைகின்றேன். அந்த மக்களின் கடனை செலுத்த தற்போது எனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்