தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவையே அதிர வைப்பவர் விஜய்.
இவருடைய படம் வெளிவருகிறது என்றாலே பலரும் தங்கள் படங்களை தள்ளி வைப்பார்கள்.
விஜய்யின் திறனை அப்படியே பின் தொடர்ந்து தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் வேலைக்காரன் படம் செப்டம்பர் மாதம் வருவதாக இருந்து தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியீடு செய்யலாம் என முடிவெடுத்துள்ளார்களாம், ஆனால், அன்றைய தினம் விஜய்யின் மெர்சல் படமும் வெளிவருகின்றது.
சிவகார்த்திகேயனும் படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் வெளியீடு செய்யலாம் என முடிவெடுத்துள்ளதாக பரபரப்பாகப் பேசப்படுகின்றது.