நீட் தேர்விற்கு எதிராக வழக்கு தொடர்ந்த வீர தமிழச்சி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா. ஆதரவாக கூட ஆள் இல்லாத நிலையில் தனி ஒரு ஆளாக நின்று நீட் தேர்வை எதிர்த்தவர். ஆனால் நீட்டிற்கு ஆதரவாக ஒரு பெரிய ஆளும் வர்க்கமே இருந்தது.
தமிழனுக்கு எங்கும் எதிரி ஒரு தமிழனே என்று பலரும் கூறுவதுண்டு. அந்த வகையில் இதுவும் உண்மையாகவே இருந்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசிற்கு ஆதரவாக களம் இறங்கியவரும் ஒரு தமிழச்சியே. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். ஒரு வழக்கில் வாதாட 2 கோடிக்கும் அதிகமாக வாங்குபவர்.
நீட் வழக்கிலும் களம் இறங்கி ஆளும் வர்க்கத்திற்கு வெற்றியை பெற்று தந்தார். ஆனால் இவர்களின் பண வெறியாட்டத்திற்கு இரையாக பலியாக்கப்பட்டவர் தான் நேற்று தற்கொலை செய்து கொண்ட அனிதா.
இந்த வழக்கு முடிந்த உடன் நளினி சிதம்பரம் கூறுகையில், ‘உச்ச நீதிமன்றத்திற்கு மேல் இந்த வழக்கை பற்றி விசாரிக்க வேண்டுமெனில் கடவுளால் மட்டும் தான் முடியும்’ என்று கூறினார். ஒரு வேலை இந்த வழக்கை பற்றி கடவுளிடம் எடுத்துரைக்க தான் அனிதாவும் சென்றுவிட்டாரோ? என்னவோ?