பிரிட்டனில் மகாராணியிடம் உதவி கேட்டு கடிதம் எழுதிய 5 வயது சிறுமி: மறுத்துள்ள மகாராணி!

பிரித்தானிய நாட்டு மகாராணியான இரண்டாம் எலிசபெத்திடம் உதவி கேட்டு 5 வயது சிறுமி ஒருவர் எழுதியுள்ள கடிதம் அனைவரும் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.

jh

தலைநகரான லண்டனில் Lyndsay Simpson என்ற 5 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

பறவைகள் மீது அதிகளவில் ஆர்வம் உள்ள சிறுமி தனது வீட்டில் அன்னப் பறவையை வளர்க்க விரும்பியுள்ளார்.

இதுக் குறித்து தனது தாயாரிடமும் சிறுமி விருப்பம் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாட்டு சட்டப்படி, நாடு முழுவதும் உள்ள அன்னப்பறவைகள் அனைத்தும் மகாராணிக்கு சொந்தமானது.

மகாராணியின் அனுமதி இல்லாமல் யாரும் அன்னப்பறவையை வீட்டில் வளர்க்க முடியாது என தாயார் சிறுமிக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தாயாரின் உதவியுடன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு சிறுமி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘நமது நாட்டில் உள்ள அனைத்து அன்னப்பறவைகளும் உங்களுக்கு மட்டும் சொந்தமானது என்பதை எனது தாயார் மூலம் அறிந்தேன்.

பறவைகள் மீது ஆர்வம் உள்ளதால் எனது வீட்டில் அன்னப்பறவை ஒன்றை சொந்தமாக வளர்க்க விரும்புகிறேன். இதற்கு உங்களது அனுமதி வேண்டும்’ என அக்கடிதத்தில் சிறுமி கோரியுள்ளார்.

கடிதம் அரண்மனையை அடைந்தவுடன் மகாராணிக்கு தகவல்களை சேர்க்கும் அதிகாரி ஒருவர் சிறுமிக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘அரண்மனைக்கு கடிதம் எழுதிய உங்களுக்கு மகாராணி நன்றி தெரிவிக்க கூறினார். உங்களது வீட்டில் சொந்தமாக அன்னப்பறவையை வளர்க்க அனுமதி கேட்டுள்ளீர்கள். இதற்கு மகாராணி பதிலளித்துள்ளார்.

பிரித்தானிய நாடு முழுவதும் உள்ள அனைத்து அன்னப்பறவைகளும் மகாராணிக்கு மட்டுமே சொந்தமானது என பல ஆண்டுகளாக ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது.

தேம்ஸ் நதிக்கரையை ஒட்டி வசித்து வரும் சில குறிப்பிட்ட இடங்களில் உள்ள அன்னப்பறவை மட்டுமே மகாராணிக்கு சொந்தமானது. இருப்பினும், நீங்கள் சொந்தமாக அன்னப்பறவையை வளர்க்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏனெனில், காடுகளில் வசிக்கும் பறவைகள் மற்றும் அன்னப்பறவைகள் அனைத்தும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் பறவைகளின் பட்டியலில் உள்ளது.

நீங்கள் சொந்தமாக வளர்க்க முயற்சி மேற்கொள்ளும் போபது அன்னப்பறவையின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் இதற்கு அனுமதி வழங்க முடியாது என்பதற்காக வருந்துகிறேன்’ என மகாராணி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.