இலங்கையை பாரிய கடன் நெருக்கடிக்குள் தள்ளியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட நிபுணர்கள் குழுவொன்று தற்போது வரையில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் காணப்பட்ட அரசியல் அமைப்பிற்கு அமைய நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியாது. எனினும் 19வது திருத்த சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி ஒருவர், அவரது பதவி காலத்தில் மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்களின் அறிக்கை எதிர்வரும் வாரத்தில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சட்ட நிபுணர்களை மேற்கோள் காட்டி குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கலந்துரையாடல் மேற்கொண்டதன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர்.