தமிழர்கள் முன்னிலையில் இலங்கையை பாராட்டிய கனேடிய பிரதமர்

இலங்கையின் சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டியுள்ளார்.

MKK

இலங்கையில் தற்போது மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன், அவற்றினை சரியான அடையாளம் காணவும் சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

30 வருடங்களாக நீடித்த போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கம் சமாதானத்துடன் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானமும் நல்லிணக்கம் தொடர தேவையான உதவிகளை செய்ய கனடா தயாராக உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனேடிய தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கனேடிய பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.