பொன்சேகாவால் கதிகலங்கி போயுள்ள மைத்திரி

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லையென தொடர்ச்சியாக குறிப்பிட்டு வரும் இலங்கை அரசாங்கத்திற்கு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

MNK

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித குலத்திற்கு எதிராக பாரிய தவறிழைக்கப்பட்டதாக முன்னாள் ராணுவ தளபதிகள் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற நிலையில், அண்மையில் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சர்வதேச நிதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போர்க்குற்ற சம்பவங்கள் தொடர்பாக சாட்சி கூறுவதற்கு தயாரென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்தே இவ்வாறு கருத்துக்கள் எழுந்துள்ளமை, ஜனாதிபதி மற்றும் பிரதமரை தர்மசங்கடத்திற்குள் தள்ளியுள்ளது.

விரைவில் ஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் செல்லவுள்ள நிலையில், இவ்வாறான கருத்துக்கள் ஏற்னவே போர்க்குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இலங்கைக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துமென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விரைவில் ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.