தெலுங்கு சினிமா என்றாலே கலர் கலராக சட்டை போடுவார்கள் என கிண்டல் தான் செய்வார்கள். ஆனால், சமீப காலமாக தெலுங்கு சினிமா இந்தியாவையே அதிர வைத்துள்ளது.
இதற்கு பாகுபலியின் வெற்றியே ஒரு காரணம், இந்நிலையில் கமர்ஷிய படங்களை தவித்து சமீபத்தில் வந்த அர்ஜுன் ரெட்டிக்கும் தெலுங்கு சினிமா சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.
இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வசூல் சாதனை செய்து வருகின்றதாம், ரூ 25 கோடிகள் வரை இப்படம் இந்தியாவில் வசூல் செய்துள்ளது.
இதுமட்டுமின்றி அமெரிக்காவில் இப்படம் 1.1 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ப்ரேமம் படத்திற்கு பிறகு தமிழகத்தில் செம்ம வரவேற்பு பெற்ற மற்ற மொழி படமாக அர்ஜுன் ரெட்டி அமைந்துள்ளது.