அனிதாவின் அறையில் இருந்த இரும்பு பெட்டியில் இருந்தவை.??

அந்த இரும்பு பெட்டியில் தான் அவளில் மொத்த உடைகளும், இரண்டு அடி அகலம் எட்டு அடி நீளம், பள்ளம் மேடுமான தரைகள் இது தான் அவள் படித்து, படுத்தும் உறங்கும் அறை.

NDBCJ

மின்விசிறி கூட இல்லாத அறையில் படித்தவள் வாங்கிய மதிப்பெண் 1176.

நீ படிச்சி டாக்டர் ஆகனும் என்று தன் தாய் அவள் குழந்தையாய் இருக்கும் போது கூறியது அவள் மருத்துவ படிப்பை நேசிக்க இதுவும் ஓர் காரணம்.

அந்த தாய் அவள் ஏழு வயது குழந்தையாய் இருக்கும் போது இறந்துவிட்டாள்.

தாய் இல்லாத பிள்ளை, தகப்பன் கூலி தொழிலாளி, அண்ணன்கள் மூன்று பேர்
இவர்களுக்கு சோறாக்கி போடும் தாய் இவள்..

அந்நிலையிலும் அவள் தாயின் கனவை நினைவாக்க விடாது படித்தாள்.

நீட் என்னும் எமனை வழக்கு மூலம் எதிர் கொண்டால்..
இருந்தபோதும் அரசும் அதிகாரமும் முன் தோல்வியை கண்டால்.

அவள் தேர்வில் தோல்வியடைந்து இறக்கவில்லை..தன் தாயின் கனவை நிறைவேற்ற முடியாமல் இறந்தால்.. அவள் இறப்பு..தமிழினித்தின் பேரிழப்பு.

மக்களும், இளைஞர்களும் பொறுமை கொள்ளக் கூடாது, நமது அடிப்படை வாழ்வாதாரத்தை ஒழிக்கவே இவர்கள் திட்டமிடுகிறார்கள்..

மாற்றம் என்பது நாம் அளிக்கும் மூன்று வாக்குகளில் உள்ளது… ஒன்று வார்டு உறுப்பினர் (கவுன்சிலர்) இரண்டு சட்ட மன்ற உறுப்பினர், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்.. இந்த மூவரும் எளியவராக, நேர்மையான வராக, சமூகப் போராளியாக தேர்வு செய்து விட்டால்,

இவர்களுக்கு கீழ் வேலை செய்யும் நகராட்சி, தாசில்தார், ஆட்சி தலைவர் அனைவரும் நேர்மையானவராக மாறி தான் ஆக வேண்டும்…

மாற்றம் இந்த மூன்று நபர்களை சிறந்த நபர்களை தேர்வு செய்தாலே போதும்.. நீங்கள் ஊழல் புரிபவர்கள் முன் போராட வேண்டிய அவசியம் இல்லை…