அமெரிக்காவில் சிறுமியை பள்ளியில் பலாத்காரம் செய்த வழக்கில் அவரின் தாய் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் தாய் லெஸ்லியான் ரீடர், அவருடைய கள்ளகாதலன் கரி பாபிஸ், ரீடரின் சகோதரி பிராண்டி, மற்றும் பிராண்டியின் கணவரான ஷான் வெய்லி ஆகியோர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அந்த சிறுமியை ஆல்பியன் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளனர்.
சென்றவாரம், அந்த இடத்தில் இருந்து தப்பித்த சிறுமி அருகில் உள்ள வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதன் மூலமாக, உண்மை வெளிச்சத்திற்கு வர சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்த அவரது தாய் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது உறவினர் வீட்டில் வசித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்