உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது மெர்சல் டீஸர் – மெர்சல் தயாரிப்பாளர்

விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. அதனால் படத்தின் போஸ்ட் பிரோடக்ஷன் பணிகளை முடித்து சென்சாருக்கு அனுப்பும் முனைப்பில் பணியாற்றி வருகிறது படக்குழு.

jhjh

டீஸர் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என அட்லீ மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். ஆனால் தற்போது வரை டீஸர் தேதி பற்றிய எந்த அறிவிப்பும் வராததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இது பற்றி ட்விட்டியுள்ள தயாரிப்பாளர் ஹேமா “டீஸர் விரைவில் வெளியாகும், தேதி அறிவிக்கப்படும். ரிலாக்ஸாக இருங்கள், உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது மெர்சல் டீஸர்” என கூறியுள்ளார்.