தற்கொலைக்கு முயன்ற முதியோர் இல்ல மூதாட்டி – பொதுமக்களால் மீட்பு

பாணந்துறையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற வயோதிப பெண்ணொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

mnnj

பாணந்துறை, நல்லுருவ ரயில் வீதியில் பாய்வதற்கு தயாராக இருந்த 85 வயதான மூதாட்டியை, கிராம மக்கள் காப்பாற்றியுள்ளனர்.

இதனையடுத்து மொரட்டுவ கட்டுகுருந்த சாந்த மரியா வித்தியாலயத்தின் அதிபரான நில்ஷான் டயஸ், குறித்த மூதாட்டியை பாணந்துறையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளார்.

இடவசதி போதாமையினால் அவரை ஏற்றுக் கொள்ள முடியாதென முதியோர் இல்லத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளனார். எனினும் அவரை பாணந்துறை பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த மூதாட்டியின் தகவல்களை பதிவு செய்து கொண்ட பொலிஸார் அவரை மீண்டும் வயோதிப இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.

எனினும் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என்ற தகவல் வெளியாகவில்லை.