அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறி, பகிரங்க விமர்சனத்தை மேற்கொண்டமையால், நீதி மற்றும் புத்த சாசன அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ, மீண்டுமொரு தடவை பதவியிழக்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மஹரகம தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக, விஜயதாச ராஜபக்ஷ பதவி வகிக்கும் நிலையில், அந்தப் பதவியையே அவர் இழக்கவுள்ளார்.
அவருக்குப் பதிலாக, தேசிய இளைஞர் சபையின் தலைவர் எரங்க வெலியன்ககே, மஹரகம தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.