* அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள்.
* ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்டராக வாங்குங்கள். அதை முடிந்த வரை வீட்டின் நடுவில் உயரமான இடமாக பார்த்து வைத்தால் நலம்.
காரணம், நடுவில் நிறைய பொருட்கள் இருந்தால் சிக்னல் தடைபடும். எங்கிருந்து பார்த்தாலும், உங்கள் பார்வையில் ரெளட்டர் படும்படி இருந்தால் இன்னும் விசேஷம்.
* ரெளட்டருக்கு அருகில் மைக்ரோவேவ், கார்ட்லெஸ் மொபைல் போன்ற கருவிகள் இருந்தால் சிக்னல் தடைபடும். காரணம் உலோக பொருட்கள் சிக்னலை வெகுவாக பாதிக்கும். பக்கத்து வீட்டு ரெளட்டரிடம் இருந்து உங்கள் ரெளட்டரை முடிந்தவரை தள்ளி வையுங்கள். இரண்டு சிக்னல்களும் க்ராஸ் செய்தாலும் சிக்னல் பாதிக்கப்படும்.
* அவ்வபோது மோடமை ரீசெட் செய்யுங்கள். கேட்க சிம்பிளான வேலையாக இருந்தாலும் அதிக பயன் தரக்கூடிய ட்ரிக் இது. ரீசெட் செய்யும்போது சில பிரச்னைகள் தன்னாலேயே சரியாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அவ்வபோது சாஃப்ட்வேர் அப்டேட் செய்துகொண்டே இருங்கள்.
* உங்கள் வைஃபை செட்டிங் WEP-ல் இருந்தால் அதை WPA அல்லது WPA2 என்ற செட்டிங்கிற்கு மாற்றுங்கள். காரணம் WEP நெட்வொர்க்கை எளிதாக ஹேக் செய்ய இயலும்.