பகுதி நேர வகுப்புக்கு சென்ற பாடசாலை மாணவி ஒருவரை இரண்டு இளைஞர்கள் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நடந்துள்ளது.
பிரபல பாடசாலையில் உயர் தரம் பயின்று வரும் இந்த மாணவி, திஸ்ஸமஹாராம நகரில் பகுதி நேர வகுப்புக்கு சென்று விட்டு தனது தோழிகளுடன் வீரவில சகருக்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
மூன்று பெண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் கடத்தப்பட்ட 16 வயதுடைய இந்த மாணவி இரண்டாவது பிள்ளை என கூறப்படுகிறது.
குறித்த மாணவியின் தந்தை காமினி ஜயதிலக்க சம்பவம் பற்றி கூறுகையில்,
மகளுடன் பழகிய சம வயதுள்ள நண்பர்கள் திட்டமிட்டு மகளை கடத்திச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மகள் கடத்திச் செல்லப்பட்டு ஒரு மாத காலத்திற்கும் மேலாகியுள்ளது.
ஜூலை 29 ஆம் திகதி மகள் கடத்திச் செல்லப்பட்டதாக வீரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காதல் தொடர்பை அடிப்படையாக கொண்டு தனது மகளை கடத்திச் சென்றுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை கூறியுள்ளார்.
தனது மகளிடம் விருப்பம் கேட்டு வந்த தமது பிரதேசத்தை இளைஞர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.