இலங்கையின் ஆட்சியாளர்கள், முன்னாள் படைகளின் பிரதானியாக இருந்த ஜகத் ஜயசூரிய போன்றோரை தூதுவர்களாகவும் உயர்ஸ்தானிகர்களாகவும் வெளிநாடுகளுக்கு அனுப்பி சட்ட விலக்கல் தொடர்பான சலுகைகளை வழங்கி அவர்களை போர்க்குற்றங்களில் இருந்து காப்பாற்றி வருகின்றனர் என பிரித்தானியாவிலுள்ள வழக்கறிஞர் கணநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இலங்கையின் படைகளின் பிரதானியாக இருந்த ஜெகத் ஜயசூரியவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த நாட்டில் இருந்து அவர் பின்வாங்கிய செய்திகள் இதற்கு முன்னர் வெளியாகியிருந்தன.
உண்மையில் ஜெகத் ஜயசூரியவுக்கு அக் காலக்கட்டத்தில் நடந்தது என்ன? அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் பின்புலம் என்ன? என்பது தொடர்பாக அறிந்து கொள்வதற்காக பிரித்தானியாவில் வசித்து வரும் மனித உரிமைகள் ஆர்வலரும், வழக்கறிஞருமான கணநாதன் இது குறித்து லங்காசிறி செய்தி சேவைக்கு கருத்து வழங்கியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,