உலகளாவிய ரீதியில் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள முதல் பெண்மணிகளில் ஷிரந்தி ராஜபக்சவும் இணைவு

உலகளாவிய ரீதியில் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள உலகின் முதல் ஐந்து பெண்மனிகள் தொடர்பாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

m,m,

இதில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு இலங்கை ரகர் வீரர் வசீம் தாஜுடீன் வாகன விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அது வாகன விபத்தாக கருதப்பட்ட போதிலும், தற்போது அது கொலையாக விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

அவரது தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் அந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

நிலையில் ஷிரந்தி ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.