இந்தியாவை ரி-20யில் வீழ்த்த தரங்கவுடன் தயாராகும் அணி

இந்திய அணிக்கு எதிரான ஒரே ஒரு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான 15 பேரை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

cx

இதற்கமைய அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் இருபதுக்கு 20 போட்டிகளின் தலைவராக செயற்படவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான தலைவராக எஞ்சலோ மெத்திவ்ஸ் செயற்பட்ட நிலையில், அவர் கடந்த ஜீலை மாதம் தலைவர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடதக்கது.

எவ்வாறாயினும் சில காலம் லசித் மாலிங்கவும் ரி-20 போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தியிருந்தமையும் நினைவு கூறதக்கது.

இந்த பின்னணியில் உபுல் தரங்கவிற்கு நாளை நடைபெறும் இந்திய அணிக்கு எதிராக ரி-20 போட்டியில் இலங்கை அணியை வழிநடத்;தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 15 பேரை கொண்ட ரி-20 அணியில் தரங்க அடங்களாக எஞ்ஞலோ மெத்திவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல, டில்ஷான் முனவீர, தசுன் ஷானக்க, மிலிந்த சிறிவர்தன, வனிது ஹசரங்க, அக்கில தனஞ்சய, ஜெப்ரி வென்டசே, இசுரு உதான, சிகுகே பிரசன்ன, திசர பெரேரா, லசித் மாலிங்க, சுரங்க லக்மால் மற்றும் விக்கும் சஞ்சய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளையும், ,ஐந்து ஒரு நாள் போட்டிகளையும் வெள்ளையடிப்பு முறையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் தொடரில் எஞ்சியுள்ள ஒரே ஒரு ரி-20 போட்டியையும் இந்திய அணி கைபற்றி, வெற்றி மேல் வெற்றியுடன் பாரதம் திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எனினும் முன்னைய போட்டிகளில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை இலங்கை அணி வீரர்கள் நாளைய போட்டியில் சரியாக பயன்படுத்தி தொடரில் ஆறுதல் வெற்றியை பெற்று ஆறுதல் அளிப்பார்கள் என இலங்கை ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.