பொதுவாக ஒரு பெண்ணுக்கு 9 மாதங்கள் மட்டும் தான் கர்ப்ப காலம். ஆனால் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஜாரா அபோடாலிப் என்பவர் 46 ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்திருக்கிறார்.
1955-ம் ஆண்டு 26 வயதில் ஜாரா கர்ப்பமாக இருந்துள்ளார். அப்பொழுது ஏற்பட்ட பிரசவ வழியால் 48 மணி நேரம் வீட்டிலேயே துடித்துள்ளார். ஆனாலும் குழந்தை வராததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் தன் உயிருக்கும் குழந்தை உயிருக்கும் எதுவும் பாதிப்பு ஏற்படுமோ என நினைத்து, மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டார்.
அதன் பின் சில நாட்கள் மட்டும் வலி இருந்திருக்கிறது. காலப்போக்கில் அதுவும் மறைந்துவிட்டது. ஆனால் குழந்தை வெளியில் வரவில்லை. குழந்தை இறந்தால் ரத்தப்போக்கு ஏற்படும். ஜாராவிற்கு அந்த அறிகுறியும் தென்படவில்லை.
ஆண்டுகள் உருண்டோடிய பின் 75 வயதாகிய பாட்டியான ஜாராவிற்கு திடீரெனெ வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது இறந்த குழந்தை தினமும் கால்சியம் எடுத்துக்கொண்டதால் கட்டியாக மாறி வயிற்றின் உள்ளே இருந்துள்ளது.
4 மணி நேர சிகிச்சைக்கு பின் கல்குழந்தை அகற்றப்பட்டது. தற்போது 75 வயது ஜாரா பாட்டி நலமாக உள்ளார். இந்த சம்பவம் மருத்துவர்களை ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது.