இலங்கை T-20 அணியில் மீண்டும் தசுன் சானக்க, இசுரு உதான

இம்மாதம் 6ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான T-20 போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாத்தில் இசுரு உதான மற்றும் தசுன் சானக்க ஆகிய வீரர்களை தேசிய அணியின் தேர்வாளர்கள் இணைத்துள்ளனர்.

n,

இரும்புக்கர சகல துறை வீரரான தசுன் சானக்க இதுவரையில் 12 T-20 சர்வதேசபோட்டிகளில் விளையாடியுள்ளார். பெப்பரவரி மாதம் அவுஸ்திரேலியஅணிக்கெதிரான மூன்றாவது T-20 போட்டியில் இறுதியாக பிரசன்னமாகிய அவர்இரண்டு விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தார்.

அதேபோன்று, 2009ஆம் ஆண்டு அறிமுகமான இடதுகை மித வேகப்பந்து வீச்சாளரானஇசுரு உதான குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரர்களில்ஒருவராகக் காணப்படுகின்றார். இதுவரையில் 8 T-20 சர்வதேச போட்டிகளில்ஆடியிருக்கும் உதான 9 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளதுடன், 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்த சிறப்புப் பந்து வீச்சினையும் கொண்டுள்ளார். இவர்இறுதியாக ஜனவரி மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான T-20 தொடரில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடரையும் 3-0 என பறிகொடுத்து தற்போது ஒரு நாள் தொடரிலும் 5-0 எனஇந்தியாவினால் வைட் வொஷ் செய்யப்பட்டிருக்கும் இலங்கை, நடைபெறவிருக்கும் T-20 போட்டியில் சவால் மிக்க இந்தியாவிற்கு எதிராக முதல் வெற்றியினை பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.