தல தளபதியின் நாயகிக்கு கிடைத்த வாய்ப்பு

kajal

ஹிந்தியில் பெரு வெற்றி பெற்ற குயின் படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இதில், தமிழில் நடிக்கும் வாய்ப்பு காஜல் அகர்வாலுக்கு கிடைத்திருக்கிறது.

முதலில் இப்படத்தில் தமன்னா தான் நடிக்க இருந்தாராம். ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்ட காரணத்தினால் தயாரிப்பு தரப்பு மறுத்துவிட்டது. இதனால் படத்திலிருந்து விலகினார். பின்னர் இந்த வேடத்தில் நடிக்க சில நடிகைகளிடம் பேசப்பட்டது. இப்போது காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார்.

காஜலுக்கு இந்த வருடம் தமிழில் அமோகம். அஜித்துடன் விவேகம்7 விஜய்யுடன் மெர்சல் என காஜல் காட்டில் ஒரே மழை தான். இதையே காரணமாக வைத்துக் கொண்டு தமிழ் ரசிகர்களிடம் சற்றும் மவுசு குறையாத காஜலை ஹீரோயின் ஆக்கியிருக்கின்றது தயாரிப்பு தரப்பு.

தமிழில் இந்த படத்தை ரேவதி இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அதில் மாற்றம் செய்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்க உள்ளார். ரமேஷ் அரவிந்த், இறுதியாக கமல் நடித்த உத்தம வில்லன் திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குயின் தெலுங்கிலும் உருவாகிறது. அதில் அமலா பால் நடிக்க உள்ளார்.