பிள்ளைகளுக்கு முன்னால் தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள தாய்

மன அழுத்தத்துக்குக்கு உள்ளாகியிருந்த குடும்ப பெண் ஒருவர் தனது பிள்ளைகளுக்கு முன்னால் பிள்ளையின் ஏணைக்கயிற்றிலேயே தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

njkn

வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த லோகானந்தம் கமலேஸ்வரி (வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இதில் உயிரிழந்தவராவார்.
குறித்த பெண்ணுக்கு கடந்த 3 மாத கால மாக மன அழுத்தம் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இவர் தனக்கு வழங்கப்பட்டிரு ந்த அனைத்து மாத்திரைகளையும் கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி திடீரென குடித் துள்ளார்.
அப்போது உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தார். பின்னர் கட ந்த 2ஆம் திகதி உடல் நலமடைந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
இவருக்கு 6 வயது மற்றும் 2 வயதில் பிள் ளைகள் உள்ளனர்.

நேற்றைய தினம் கணவர் மீன் வாங்குவதற்காக கடைக்கு சென்ற சமயம் வீட்டின் கதவினை பூட்டிவிட்டு அவரது பிள்ளை வளர்த்தப்பட்டிருந்த ஏணையில் இருந்து பிள்ளையை இறக்கி விட்டு அந்த ஏணையில் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
குழந்தைகள் நேரடியாக இதை பார்த்து சத்தமிட்டுள்ளனர் அப்போது வீட்டுக்கு வந்து கணவர் கதவு பூட்டியிருப்பதை பார்த்து வேறு வழியால் அறைக்குள் ஓடி வந்த போது மனைவி தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.