தரங்க டெஸ்ட்டிலிருந்து தற்காலிகமாக ஓய்வு

cx

இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளின் தலைவர் உபுல் தரங்க டெஸ்ட் போட்டிகளில் ஆறு மாதகாலத்திற்கு விளையாடாமலிருக்க கிரிக்கெட் சபையிடம் அனுமதி கோரியிருப்பதாக கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கெதிரான டெஸ்ட் தொடர்களில் தரங்க விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் கூடுதலான கவனம் செலுத்துவதற்கே தரங்க இவ்வாறான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் செப்டம்பர் 28 முதல் ஒக்டோபர் 10 வரை நடைபெறவுள்ள குறித்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. அதில் றோஸ் நிற பந்து பாவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.