வைத்தியர்கள் , தாதியர்களின் அசமந்த போக்கினால் இரு உயிர்கள் பரிதாப பலி…..
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கு உட்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலை அதிகாரிகளினதும், தாதியர்களினதும் அசமந்த போக்கினால் இளம் தாயும் சிசுவுமாக இரு உயிர்கள் பறிக்கப்பட்டது வேதனைக்குரிய விடயமாகும்…
வைத்தியசாலை என்பது உயிரை வாழவைப்பதற்கு மட்டுமே அன்றி உயிரை பறித்தெடுப்பதற்காக அல்ல…
உயிர் பெறுமதி வாய்ந்தது விலை மதிக்கமுடியாதது திரும்ப பெற முடியாதது..
இந்த ஏழைப்பெண்ணுக்கு நடந்த துயரமான சம்பவம் போன்று, இனிவரும் காலங்களில் அப்பகுதி மக்களுக்கு நடக்காதிருக்க இதற்கான உரிய சட்டநடவடிக்கை உரிய அதிகாரிகள் மீது எடுக்கப்படுமா? அல்லது வழமை போல் பணத்தினால் நீதி பூசி மறைக்கப்படுமா?