தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பிஸியாக நடித்துவருகிறார்.
இன்று சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். காரணம் என்ன தெரியுமா?
சூர்யா திரையுலகில் காலடி எடுத்து வைத்து இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது. அவரின் முதல் படம் நேருக்கு நேர் படம் 6 செப்டம்பர் 1997ல் வெளியானது.
இன்று தானா சேர்ந்த கூட்டம் படக்குழு எதாவது புதிய அறிவிப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, அது முடிந்தவுடன் டீஸர், ட்ரைலர் தேதிகள் பற்றி அறிவிக்கப்படும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அறிவித்தது நினைவிருக்கலாம்.