தமிழ் மக்களில் 90 சதவீதத்தினர் எனக்கு வாக்களித்தனர். அவர்களின் வாக்குகளாலேயே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டேன்

தமிழ் மக்களில் 90 சதவீதத்தினர் எனக்கு வாக்களித்தனர். அவர்களின் வாக்குகளாலேயே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டேன். உங்களுக்கு நியாயமாகவே நான் செயற்படுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் நேரில் தெரிவித்தார்.

images (5)

ஜனாதிபதி செயலகத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் அரச தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை மதியம் 12.30மணிக்கு ஆரம்பமானது.

இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசுகையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியான மாற்றங்களும் நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்களில் 90 சதவீதமானவர்கள் எனக்கே வாக்களித்தனர்.அவர்களின் வாக்குகளாலேயே நான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். உங்களுக்கு நியாயமாகவே நான் செயற்படுவேன், என்று அரச தலைவர் மைத்திரி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.