சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்போது காற்றின் வேகம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனவும் அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில், அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களை 60 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், வாகனங்களுக்கிடையில் சுமார் 50 மீற்றர் அளவில் இடைவெளியை பேணுமாறு அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாகனத்தின் முன்பக்க விளக்கை எரிய விட்டு வாகனத்தை செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.