விபத்தொன்றில் உயிரிழந்த சிறுவனின் இரு சிறுநீரகங்களும் இரு பெண்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.
பொலனறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், உயிரிழந்த பின்பும் இரு பெண்களுக்கு வாழ்வளித்துள்ளான்.
வாகனத்தின் சில் ஒன்று விழுந்ததில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். இவருடைய சிறுநீரகங்கள் அவரது குடும்பத்தாரின் சம்மதத்துடன் இரு பெண்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.
கண்டி வைத்தியசாலையில் இதற்கான சத்திர சிகிச்சைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.
விசேட வைத்திய நிபுணர் சரித பெர்னாண்டோ தலைமையிலான குழுவினரே இந்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் 7 வயது சிறுவனின் சிறுநீரகத்தை 27 வயதுடைய பெண்ணுக்கும், 63 வயதுடைய மற்றுமொரு பெண்ணுக்கும் பொருத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.