சரத் பொன்சேகாவின் கருத்து குறித்து ஐ.நாவுக்கு கடிதம் எழுதிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போர் குற்றம் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

d cd

இது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு கடிதம் ஒன்றை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பியுள்ளது.

முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்து மூலம் இலங்கையின் பாதுகாப்பு படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக கூறியுள்ளது.

இலங்கையின் அரசாங்கங்கள் கடந்த 8 ஆண்டுகள் நாட்டில் போர் குற்றங்கள் நடக்கவில்லை என்று நிராகரித்து வந்தது.

இந்த நிலையில், அரசாங்கத்தில் சிரேஷ்ட பதவி வகித்து வரும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா புதிய தகவல் வெளிப்படுத்தலை மேற்கொண்டுள்ளதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.