நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யத் தயார் – மஹிந்த

லலித் வீரதுங்க மற்றும்; அனுஷ பெல்பிட்டவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

mahinda-rajapaksa1

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பிரசாரங்களுக்காக தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபா செலவில் பிக்கு உடை கொள்வனவில் மோசடியில் ஈடுபட்டிருந்தமை தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்ப்பு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவால் இன்று பிறப்பிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு தலா மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக இருவருக்கும் தலா 2 மில்லியன் ரூபா அபராதமும், 50 மில்லியன் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த நட்டஈட்டை செலுத்தத் தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த தண்டனைத் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.