நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்காக தேசிய கீதம் ஒரே மேடையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்பட்டு வருகிறது.
இலங்கை நமது நாடு என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இது முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்ட புதிய யோசனை ஒன்று சமூக நல்லிணக்க விரும்பிகளால், முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் தனித்தனியாக பாடுவதற்கு பதிலாக இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் பாடுவதன் மூலம் இரண்டாக பிளவுபட்டு மக்கள் மனங்களில் அன்பான உணர்வை ஏற்படுத்த முடியும் என இந்த யோசனை முன்வைத்துள்ள சமூக நல்லிணக்க விரும்பிகள் தெரிவித்துள்ளனர்