பிரேதங்களைக்கூட பெறமுடியாமல் தவிக்கும் வடக்கு தமிழர்கள்

இறந்த தமது உறவினர்களின் பிரேதங்களைக்கூட உரிய நேரத்தில் பெறமுடியாத ஓர் துர்ப்பாக்கிய நிலையில் வடக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

0B1A526A000005DC-3482524-While_various_belief_systems_offer_explanations_for_the_metaphys-m-5_1457460103940

வடக்கு மாகாணத்தில் திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதென, நாடாளுமன்றில் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால், இறந்த தமது உறவினர்களது பிரேதங்களை பெற்றுக்கொள்ள வடக்கு மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குறிப்பிட்ட சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கிற்கு தகுதிவாய்ந்த திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

மேலும், வடக்கின் வைத்தியசாலைகளிலுள்ள பிரேத அறைகளில் போதிய குளிரூட்டிகளும் இல்லாமல் உள்ளதென இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.