வங்கியில் கொள்ளையிட முயற்சித்த நபரை மடக்கி பிடித்த இளைஞர்கள்

காலி, பத்தேகம கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கிராம வங்கியில் கொள்ளையடிப்பதற்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை வங்கி ஊழியர்கள் மற்றும் பிரதேச இளைஞர்கள் இணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

elizabeth-city-bank-robbery1

நேற்று காலை 11.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகத்தை மூடும் வகையில் தலைகவசம் அணிந்து வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர், துப்பாக்கி ஒன்றை காட்டி கொள்ளையடிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் வங்கி ஊழியர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் கொடுக்கல் வாங்கல்களுக்காக வந்தவர்களும் வங்கிக்குள் இருந்தனர். கூச்சல் சத்தத்தை கேட்ட பிரதேச மக்கள் கொள்ளையடிக்க வந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் சாவியை மோட்டார் சைக்கிளில் இருந்து எடுத்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கியை காட்டி கொள்ளைக்காரர் தப்பி செல்வதற்கு முயற்சித்துள்ளார். அதன் போது அருகில் இருந்த நபர்கள் போராடி அவரை பிடித்துள்ளனர்.

அதன் பின்னர் கொள்ளைக்காரரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொள்ளைக்காரரிடம் இருந்தது விளையாட்டு துப்பாக்கி என தெரியவந்துள்ளது. அண்மையில் 30 லட்சம் கொள்ளையடித்த கொள்ளைக்காரருக்கு சமமான உருவம் இந்த சந்தேக நபரிடமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.