கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
விமானப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு அண்மித்த பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவின் முகாம் ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.