அமலா பால் நடிக்க இருந்த மலையாளப் படத்தில், தற்போது மஞ்சிமா மோகன் கமிட்டாகியுள்ளார். கங்கனா ரனாவத் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘குயின்’. இந்தப் படம், நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நீலகந்தா இயக்க, தமிழில் ரேவதி இயக்குகிறார்.
கங்கனா கேரக்டரில் தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், தமிழில் காஜல் அகர்வாலும் நடிக்கின்றனர். மலையாளத்தில் முதலில் கமிட்டானவர் அமலா பால். ஆனால், அவரை நீக்கிவிட்டு தற்போது மஞ்சிமா மோகனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
‘ஒரு வடக்கன் செல்ஃபி’யைத் தொடர்ந்து மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்கும் இரண்டாவது மலையாளப் படம் இது. நான்கு மொழிகளிலும் எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.