மனைவி வெளிநாடு சென்றமையால், அதனை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் தற்கொலை செய்துள்ளார்.
மாத்தளை, கல்லேவெல பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தனக்கு விருப்பம் இல்லாமல் மனைவி வெளிநாட்டு தொழிலுக்கு சென்றுள்ளார். இதனால் ஏற்பட்ட மனவேதனையில் 48 வயதான ரத்னசேகர என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவியின் சகோதரன் சாட்சியம் வழங்கியுள்ளார்.
எனது அக்காவான லலனி தில்ருக்ஷியின் கணவனே உயிரிழந்தவராகும். அவர்களுக்கு 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர். அக்கா இதற்கு முன்னர் பல வருடங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பினார்.
மீண்டும் அவர் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்த போது மைத்துனர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டார். இதனால் அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் விஷம் அருந்தினார். அதில் அவர் உயிர் தப்பியுள்ளார்.
மைத்துனரின் எதிர்ப்பின் மத்தியில் அவர் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்றார். அன்றைய தினம் மாலை 4 மணியளவில் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அக்கா சென்ற மனக்கவலையில் அவர் தற்கொலை செய்து கொளண்டுள்ளதாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த நபர் தூக்கிட்டு கொண்டமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி உறுதி செய்துள்ளார்.